புலிகளின் சர்தேச வலையமைப்பை இலக்கு வைத்து இலங்கை எரித்திரியாவில் தூதரகம்.
புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியான கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் அவ்வமைப்பின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக நம்பப்படுகின்றது. கே.பியின் தகவல்களின் அடிப்படையில் எரித்திரியா நாட்டில் புலிகளின் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் புலிகளின் ஆயுதக்கப்பல் போக்குவரத்து மையமாக எரித்திரியா விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
கே.பி யின் மேற்படி தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் உள்ள பல ஆயுத அமைப்புக்களுடன் புலிகள் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பாக அல்கைதா அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆயுதக்குழு ஒன்றுடனும் அவர்கள் உறவை பேணிவருவது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் புலிகளின் தலவர் வே. பிரபாகரன், எரித்திரிய நாட்டு ஜனாதிபதி இற்கு கடந்த 24 மே 2006 தனது கையொப்பமிட்ட தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமையும் வெளிவந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் இருந்து செயற்படக்கூடிய புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்துவன் பொருட்டு அங்கு இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எரித்திரியா அரசு புலிகளுடன் உறவைப் பேணுவதுடன் அவர்களுக்கான நேரடி உதவிகளைப் புரிந்து வருவதாக கடந்த 15 டிசம்பர் 2006 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment