Friday, August 7, 2009

கேபி மலேசியாவில் கைது : கொழும்பில் விசாணை செய்யப்படுகின்றார்.

புலிகளின் தற்போதைய தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த கேபி எனப்படும் குமரன் பத்தநாதன் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனாதிபதியின் சகோதரன் பசில் ராஜபக்ச உறுதிசெய்துள்ளார். அத்துடன் கேபி் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய, கோலாலம்பூர் விடுதி ஒன்றில் வைத்து மிகவும் நுணுக்கமாக இக்கைது இடம்பெற்றுள்ளது. அவ்விடுதியில் தனது இரு விருந்தினர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பொன்றில் உரையாடியவாறு ஹோட்டலின் வெளிப்பகுதிக்குச் சென்ற கே.பி மீண்டும் தனது அறைக்கு திருப்பவில்லை என அவருடன் பேசிக்கொண்டிருந்த விருந்தினர்கள் மலேசியாவில் உள்ள கேபி யின் உதவியாளர்களுக்கும், மற்றும் நெருங்கியவர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

கேபியின் அறையில் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் பா. நடேசனது மகன் மற்றும் சகோதரன் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா சென்ற இலங்கை புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகளினாலேயே மேற்படி கைது இடம்பெற்றதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இலங்கை புலனாய்வு அதிகாரிகள் குழு கைவிலங்கிட்ட ஒருவரை முற்றாக முடிமறைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

1 comment:

  1. புலிகளால் தினசரி இலங்கையில் புதைகுழிக்குள் இலங்கையரின் பிள்ளைகள் பிணமாக அனுபப்படுவதை வீ.பீக்கு கோவணத்தையும் உரித்து பிடரியில் கோடாலியால் கொத்தி தடுத்தி நிறுத்திய துணிச்சல்மிக்க வீரர்கள் ராஜபக்சே சகோதரர்கள்.

    புலி பினாமிகளால் புலன்பெயர்ந்த இலங்கையரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடிக்கப்படுவதை கே.பீயின் கைது மூலம் நிறுத்தி புலன் பெயர்ந்த இலங்கையரை காப்பாற்றியதும் இலங்கை மண்மீது உண்மையான பாசம்மிக்க ராஜபக்சே சகோதரர்தான்.

    வாழ்க ராஜபக்சே சகோதரர்
    வளர்க இலங்கை மக்களின் ஐக்கியம்

    ReplyDelete