Monday, August 17, 2009

அமெரிக்க விமான நிலையத்தில் விசாரணை: மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்த மாட்டேன்- நடிகர் ஷாருக்கான்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தி நடிகர் ஷாருக்கான் அங்கு சென்றார். நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்துச் சென்று இரண்டு மணி நேரம் தனியறையில் விசாரணை நடத்தினார்கள். நியுயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-அது ஒரு பின்பற்றக் கூடிய வழக்கமான நடைமுறை என்று நான் கருதுகிறேன். எனினும், மிகவும் துரதிர்ஷ்டவசமான பரிசோதனை நடைமுறை ஆகும். அந்த சம்பவத்தை முற்றிலுமாக மறந்து விடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விமான நிலையத்தில் அவமரியாதை செய்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு நான் வலியுறுத்த மாட்டேன். என்னுடைய பெயரில் `கான்` என்று இருந்ததால் உண்மையிலேயே அவமரியாதைக்கு உள்ளானேன். அது ஒரு முஸ்லிம் பெயர். அவர்கள் வைத்திருந்த பரிசோதனை பட்டியலில் சாதாரணமாகவே அந்த பெயர் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment