வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது என்கிறார் வாசுதேவ நாணயக்கார
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது அதிகார எல்லைகளுக்கு அப்பால் சென்று அதீத அதிகாரம் செலுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் தலையீடு தேவையென ஜனாதிபதியின் ஆலோசகரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபை நிர்வாகங்களில் ஆளுநரின் தலையீடு மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது ஆளுநர் தரப்பிலிருந்து வெளியிடப்படும் எதிர்ப்பு மற்றும் இணைக்கப்பாடின்மை காரணமாக மக்களுக்கு சேவையை வழங்க முடியாதுள்ளதாக முதலமைச்சர் சிவநேசன்துரை சந்திரசேகரன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலை, கிழக்கு மாகாண சபையை ஆளுநரின் பதவிக்குள் அடங்கிவிடும் எனவும், இதனால் மாகாண சபை மீது மக்களுக்கு நம்பிக்கையற்றுப் போகும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment