வான்புலிகளின் முதற்பறப்பை பார்வையிடும் பிரபாகரனும் தளபதிகளும். (புகைப்படங்கள்)
புலிகள் வான்படையை நிர்மானித்து அதன் முதற்பறப்பை புலிகளின் தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது.
இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக ஹெலிக்கொப்டர்கள் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதே நேரம் இவ்வாறான ஹெலிக்கொப்படர்கள் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த பயங்கரவாக அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளின் வழர்ச்சி உலகிற்கு அச்சுறுத்தலாக அமையப்போகின்றது என சர்வதேசம் கருதியமைக்கும் இவ்வான்படை நிர்மானமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 comments :
நாங்கள் கடவுளுக்கு பூசை செய்பவருக்கு காசு கொடுத்தால் கடவுள் எங்களுக்கு மட்டும் விசேஷமாக நல்லது செய்வார். இயக்கத்துக்கு காசு சேர்ப்பவரிடம் காசு கொடுத்தால் எமக்கு நாடு கிடைக்கும் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதை விட துப்பாக்கியால் இலகுவாக தீர்க்க முடியும் காசேதான் கடவுள் என்று நம்புகிறவர்கள்.
எங்களை வேறு விதமாக சிந்திக்க சொல்கிறீர்களா
Post a Comment