ஆசியாவில் இடம்பெற்றுவந்த மாபெரும் கிரடிட்காட் மோசடி முறியடிப்பு. விருகோதரன்.
இலங்கையில் இருந்து செயற்பட்டுவந்த கிரடிற்காட் மோசடி குழு ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த counterfeit foreign currency பிரிவினர் கைது செய்துள்ளனர். உலகரீதியாக பல நாடுகளிலும் இவ்வாறான குழுக்களை முறியடிப்பதில் விசேட பயிற்றப்பட்ட பொலிஸார் முழுநேரமும் விழிப்பாக இருக்கும் நிலையில் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்ற கைதும், கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், தகவல்கள், உபகரணங்கள் ஒப்பீட்டளவில் ஆசியாவிலே இடம்பெற்றிருக்கின்ற மாபெரும் மோசடி முறியடிப்பாக கொள்ளப்பட்டுள்ளது.
கிறடிற்காட் மோசடிகளின் முக்கிய புள்ளி வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டிருந்த பல பிரபல வர்த்தகர்களும் மாட்டிக்கொண்டுள்ளனர். இம்மோசடிகளின் பிரதான நபரான நேசநாயகம் முருகானந்தன் வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார். குறிப்பிட்ட ஆடம்பர தொடர்மாடியில் இருந்து முருகானந்தன் மேற்படி மோசடிகளுக்காக பயன்படுத்திவந்த கணனிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீட்டில் இருந்த கிறடிற்காட்களை உருவாக்கும் data encoding machine, skimmer, credit cards 421 உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டள்ளது. இங்கு ஸ்கிம்மர் என்பது கிறடிற்காட் உரிமையாளர்களது சகல தரவுகளையும் அவர்களுக்கு தெரியாது பதிவு செய்துகொள்ளும் ஒர் உபகரணமாகும்.
Skimmers பல வடிவங்களை கொண்டுள்ளது. கிறடிற்காட் மோசடியை பாரிய அளவில் செய்கின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் கைதேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஸ்கிம்மர் மூலம் கிரடிற்காட் பாவனையாளர்களுடைய தகவல்ளை பெற்றுக்கொள்கின்றனர்.
எங்கெங்கு கிறடிற்காட் மெசின்கள் பாவனையில் உள்ளதோ அங்கங்கெல்லாம் தம்மால் முடிந்த வரை உள்நுழைந்து அங்குள்ள உழியர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து அவர்கள் கைகளில் குறிப்பிட்ட Skimmer கள் கொடுக்கப்படும். (உணவு விடுதிகளில் வேலை செய்யும் சிப்பந்திகள், பெற்றோல் நிலையங்களில் வேலைசெய்வோர் பிரதானமாக இவர்களின் வலைகளில் சிக்குவதுண்டு) கிறடிற்காட் அளவிலும் சற்று தடிப்பமான கருவி. (3.5 அங்குலம் நீளம் அரை அங்குலம் தடிப்பு) குறிப்பிட்ட வேலையாட்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து காட்டை பெறும்போது எவ்வாறாவது அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒருதடவை தங்களிடம் உள்ள Skimmer இல் ஒர் உரசல் உரஞ்ச வேண்டியதுதான் காட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் ஸ்கிம்மரில் உள்ள மெமொரி காட்டில் பதிவாகிவிடும்.
ஆனால் சில இடங்களில் குறிப்பிட்ட ஸ்கிம்மர் ஆனது கிறடிற்காட் மெசின்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், கிறடிற்காட் மெசினில் ஒருதடவை காட் இழுக்கப்படும் போது அதன் தரவுகள் யாவும் ஸ்கிம்மரிலுள்ள மெமொரி காட்டிலும் பதிவாகி விடும். பின்னர் மெமொரி காட்டிலுள்ள தரவுகள் தமக்கு தேவையானவாறு தரவிறக்கம் செய்து கொள்ளப்படும்.
பல வகை ஸ்கிம்மர்கள் இனம்காணப்பட்டு கிரடிற்காட் வாடிக்கையாளர்கள் விழிப்படைந்துள்ள நிலையில் நவீன ஸ்கிம்மர்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இவை data cable இல்லாமல் ரிமோட் கொன்றோல் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. இவை சில சமயங்களில் கிறடிற்காட் மெசின் உள்ள கடைகளில் மெசினில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்லது அங்குள்ள ஊழியர்களின் சேட், காற்சட்டை பைகளில் காணப்படும். இவற்றுக்கும் அப்பால் நபர்கள் கூட இவற்றை தம்முடன் எடுத்துச்சென்று ATM Mechine அருகில் அல்லது சிறடிற்காட் மெசின் அருகில் நின்று தரவுகளை அபேஸ் பண்ணிக்கொண்டு சென்று விடுவார்கள்.
இச்செயற்பாடுகளில் லண்டன், தென்ஆபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள புலிகள் அந்நாட்டு கிரடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் திருடி பெரும் மோசடிகளில் ஈடுபட்டுவருவதாக அந்நாடுகளின் பொலிஸார் பலமுறை தெரிவித்துள்ளனர்.
தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நேசநாயகம் முருகானந்தன் புலிளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். இவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது தான் உருவாக்கும் கிறடிற்காட்டுக்களுக்கான தரவுகள் லண்டன், தென்னாபிரிக்கா, மலேசியாவில் உள்ள நபர்கள் மூலமாகவே கிடைப்பாதாக தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலில் உள்ள செயற்பாட்டாளர்களிடம் இருந்தே இவருக்கு உபகரணங்கள் மற்றும் தரவுகள் கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும் என counterfeit foreign currency பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் குறிப்பிட்ட கும்பலில் கைதுசெய்யப்பட்டுள்ள லக்ஸ்மி பவான் உணவக உரிமையாளரின் மகனான நித்தி எனப்படும் அம்பலவாணன் நித்தியானந்தனிடம் இருந்து 418 கிரடிற்காட்டுக்களும், கிரடிற்காட் பாவனையாளர்களின் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த Laptop ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் கொழும்பில் பல லொட்சுக்கள், கடைகளை வைத்திருந்து தனது வியாபார ஸ்தாபனங்களின் ஊடாக உள்ளுர் கிறடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்று போலிக்காட்டுக்களை உருவாக்கியிருந்தமை தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கை கிறடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளுடன் உருவாக்கப்பட்ட போலிக்காட்டுக்கள் அதிகளவில் பாவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
அவ்வாறு அவை பாவிக்கப்பட்டிருந்தால் இலங்கையில் கிறடிற்காட் காப்புறதி வசதிகள் இல்லாத நிலையில் பாவனையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்க நேரிட்டிருக்கும். காரணம் இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினரான மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பலர் தற்போது கிறடிற்காட் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களின் தகவல்களே நித்தியானந்தனால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அவை பாவிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பின் அவற்றின் சுமையை மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்து அச்சிறிய சம்பளத்திலேயே வாழ்கை நாடாத்திவரும் நடுத்தரவர்க்கத்தினரால் சுமப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
மேற்படி கிறடிற்காட் மோசடிக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் உண்டு என்பது நித்தியானந்தன் தொடர்புபட்டிருப்பதுடன் மேலும் தெளிவாகின்றது. காரணம் நித்தி புலிகளின் தீவிர விசுவாசி என்பதுடன் கொழும்பில் உள்ள புலிகளின் ஏஜென்டுக்களில் இவரும் ஒருவர் என மக்களால் மிகவும் அறியப்பட்டவர். சில வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவரை கைது செய்து இவருக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு சம்பந்தமாக விசாரணைகளை நாடாத்தியிருந்தனர். அத்துடன் இவருக்கு எதிராக போலிக்கிறடிற் காட் வழக்குகள் மூன்று கொழும்பு நீதிமன்றில் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது.
அத்துடன் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள இப்றாகிம் எனப்படும் முஸ்லிம் நபரிடம் இருந்து 308 காட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ள 1147 போலிக்கிறடிற் காட்டுக்களாலும் மேற்கொள்ளப்பட இருந்த பாரிய மோசடி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மலேசியப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் இவ்வாறானதோர் பாரிய மோசடி முறியடிக்கப்பட்டது. மலேசியப்பொலிஸாரின் அச்செயலுக்காக மலேசியாவில் உள்ள கிறடிற்காட் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து மலேசிய பொலிஸாருக்கு பாரிய சன்மானம் ஒன்றை வழங்கியிருந்தனர்.
ஆனால் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள skimmers , laptop மற்றும் Sim காட்டுக்களில் வெளிநாட்டு கிறடிற்காட் பாவனையாளர்கள் பலரின் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட கிறடிற்காட் நிறுவனங்கள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்த counterfeit foreign currency யினர் நடவெடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு அவர்கள் பிறநாட்டு காவல்துறை மற்றும் வங்கிகளை தொடர்பு கொள்ளும்போது நித்தி, முருகானந்தம் ஆகியோருக்கு தரவுகளை வழங்கியோர் பிடிபட வாய்புகள் உண்டு.
0 comments :
Post a Comment