Tuesday, August 18, 2009

மக்கள் தமது காணிகளுக்கு உரிமை கோரமுடியும்.

கடந்த 30 வருட யுத்தத்தில் தமது காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளுக்கு ஆவணங்களுடன் உரிமைகோர முடியும் என மீழ் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவராண அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அமைச்சு விடுத்துள்ளதுடன் அவ் அறிக்கையில் மக்கள் தமது உடமைகளை உரிமைகோருவதற்கு எவ்வித தயக்கமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.

நாட்டின் சூழ்நிலைமை காரணமாக வடகிழக்கை விட்டு வெளியேறிய மக்கள் பலரின் காணிகளை புலிகள் சுவிகரித்து தமது உறுப்பினர்கள் மற்றும் அவ்வியக்கத்தில் இருந்து உயிரிழந்தோரது குடும்பங்களுக்கு வழங்கியிருந்தனர். அவ்வாறு புலிகளிடம் தமது காணிகளை பறிகொடுத்த மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தமது காணிகளுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அக்காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் அல்லது அறிக்கையின் தமிழாக்கம் இன்னும் ஓரிரு நாட்களில் எமது இணையத்தில் பிரசுரிக்கப்படும்.

No comments:

Post a Comment