எஸ்பி ஜமால்தீன் கொலையாளிகள் கைது. ஓப்பந்தக்கொலை:
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனர் ஜமால்தீன் அவர்களின் கொலை தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேச நபர்களில் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வுத் துறையின் தகவல்களின் அடிப்படையில் காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இவர்களைக் கைது செய்து கல்முனைப் பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர். மருதமுனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுலைமாலெப்பை நஜீமுர் ரஹ்மான, வீரன் எனப்படும் புலிகளியக்க உறுப்பினரான மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன், நற்பட்டிமுனையைச் சேர்ந்த மொஹமட் காசிம் ஹம்சா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது ஒர் ஒப்பந்தக் கொலை என்பது வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுலைமாலெப்பை நஜீமுர் ரஹ்மான இக்கொலைக்காக வீரா எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு பத்து லட்சம் ரூபா தருவதாக இணங்கியிருந்ததாக வீரா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே றஹ்மான இக்கொலையைத் திட்டமிட்டுள்ளார். குடும்ப தகராறு மற்றும் லஞ்சம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சச்சரவு கொலை ஒப்பந்தத்திற்கு தூபமிட்டதாக மருதமுனைவாசி ஒருவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment