Friday, August 14, 2009

கொழும்பு குற்றபத்தடுப்பு பிரிவின் இயக்குனர் வாஸ் குணவர்த்தனவின் மகனை கைது செய்ய உத்தரவு.

மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள தகவல் தொழிநுட்ப கல்லுரியின் மூன்றாம் ஆண்டு மாணவன் நிபுண ராமநாயக்காவை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அதே நிறுவகத்தில் கல்வி பயின்று வரும் மாணவனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் புதல்வருமான ரவிந்து குணவர்தனவை உடனடியாக கைது செய்யுமாறு கடுவெல நீதிவான் மனிலால் பிரசன்ன டி சில்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதிருக்கும் வகையில் ரவிந்துவின் கடவுச் சீட்டையும் கைப்பற்றி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும்; நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்கா மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக ரவிந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே ரவிந்து நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தடை விதிக்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல் தொழிநுட்ப கல்லூரியைச் சேர்ந்த மாணவனான எச்.எம்.செனவிரத்னவினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தெ சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மாணவனுடன் நிபுண ராமநாயக்கா குறுக்கு வீதியொன்றினூடாக பயணித்துக் கொண்டிருந்த போதே ஜீப் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியொன்றைக் கான்பித்து அச்சுறுத்தியே நிபுணவை கடத்திச் சென்றனர் என்று பொலிஸூக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், ரவிந்துவை கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அத்துருகிரிய பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் தொடரந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com