சிறைச்சாலை ஆடம்பர சொகுசு அறையில் வாஸின் மனைவி.
தகவல் தொழில் நுட்பக்கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி சியாமலி பிரியதர்சினி பெரேரா வெலிக்கட சிறைச்சாலை அறையொன்றில் ஆடம்பர வாழ்வு வாழ்வதாக இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் காணப்படும் குறிப்பிட்ட ஆடம்பர அறையில் வாஸின் மனைவி தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறையில் சொகுசு கட்டில்கள், தொலைக்காட்சி, வானொலிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, காற்றாடி என்பன காணப்படுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவ்அறை சிறைச்சாலையில் உள்ள பெண்கைதிகள் நோய்களுக்கு உள்ளாகும் போது அவர்களை பராமரிப்பதற்காக அமைப்பட்டுள்ளதாகவும், சாதாரண கைதிகள் இவ் அறையை கண்ணால் கூட காணமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விளக்க மறியலுக்குச் செல்லும் அரசியல் செல்வாக்கு உடையோர் மற்றும் செல்வந்தர்கள் குறிப்பிட்ட அறையில் தங்க வைக்கப்படுவதாகவும், இவ் அறை சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவரின் பாராமரிப்பில் உள்ளதாகவும், குறிப்பிட்ட பெண் அதிகாரி பல தரப்பினருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர் எனவும், அவருக்கு சிறைச்சாலை வட்டாரங்களில் விசேட சலுகைள் உள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும் வாஸின் மனைவியையும் குறிப்பிட்ட அறையில் தங்கவைத்துள்ளது அதே பெண் அதிகாரி எனவும், அவ் அதிகாரியே வாஸின் மனைவியை நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு கூட்டிச் சென்றதாகவும் கூறப்பட்டள்ளது.
0 comments :
Post a Comment