Tuesday, August 11, 2009

கே.பி.யை சந்தித்து பேசி பல விபரங்களை அறிந்துகொண்டேன் - பாதுகாப்பு செயலாளர்

விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் சில உதவியுள்ளமை தெரியவந்துள்ளதுடன், கே.பி.யையும் சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவருடன் பேசியதில் பல விபரங்களை அறிந்துகொண்டேன் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹரகமவில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தõர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் 30 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றிருந்தனர். கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் நிதி சேகரிப்பு உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பான தகவல்களை கே.பி.யிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திரட்டிக்கொள்ள முடிந்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு அப்பால் ஏனைய குழுக்களுடனும், சர்வதேச உள்ளூர் அமைப்புகளுடனும் புலிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த தகவல்களும் அறியக்கிடைத்துள்ளன.

அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள கே.பி.யிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி, அவர் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
Thanks வீரகேசரி

No comments:

Post a Comment