Thursday, August 27, 2009

காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாரை அனுமதிக்க முடியாது. நீதவான்.

அங்குலான பிரதேசத்தில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அங்குலான பொலில் காவல் சாவடியின் பொறுப்பதிகாரி நீயுட்டன் மற்றும் 8 பொலிஸாரும் கல்கிஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அச்சட்டத்தை மீறி செயற்படும் போது அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் பொலிஸார் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கல்கிஸை நீதிவான் தெரிவித்தார்.

நீதிமன்றில் ஆஜராகியிருந்த குற்றபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் குணசிங்க, இளைஞர்களின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களை கொலை செய்வதற்கு கூட்டிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து கொல்லப்பட்டுள்ள இளைஞர்களின் இரத்த மாதிரிகள் மீட்கப்பட்டள்ளதாகவும், இளைஞர்கள் காணமல்போயுள்ளதாக பெண் ஒருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு பிரதி பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தான் குறிப்பிட்ட தினம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது நேரில் கண்ட சம்பவங்களை சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், அதே நேரம் மேலும் 16 நபர்கள் சம்பவம் தொடர்பாக சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களில் அனேகமானோர் குறிப்பிட்ட பொலிஸ் காவல் நிலையத்தில் பணி புரிந்த பொலிஸ்காரர்கள் என தெரியவருகின்றது. சாட்சிகளில் இரு இளைஞர்களும் பொலிஸாரால் குறிப்பிட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதை கண்டவர்களும் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment