சந்திரிகா பாராளுமன்றம் நுழைகின்றாராம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் நுழையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் மூலம் அவர் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்னணி ஒன்றை அமைத்து மஹிந்த அரசை கவிழ்ப்பதற்காக சந்திரிகா அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. பல காரணிகளை காரணம் காட்டி ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தை தவிர்த்து பொதுவான ஓர் சின்னம் ஒன்றை தெரிவு செய்து தேர்தல் ஒன்றை சந்திக்க தயாராகுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்திரிகா அம்மையார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.
அமைக்கப்படவுள்ள முன்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறிய மங்கள சமரவீர அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அபே ஜாதிக பெருமுன, றவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்ரஸ், மனோ கணேசன் தலைமையிலான மேற்கு மக்கள் முன்னணி மற்றும் நவ சிகல உறுமய போன்ற கட்சிகள் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment