25 கோடி பெறுமதியான பாடப்புத்தகங்கள் அழித்கொழிக்கப்படவுள்ளது.
இலங்கை கல்வித் திணைக்களத்தின் வெளியீட்டு பிரிவினரால் அளவிற்கு அதிகமாக அச்சடிக்கப்பட்ட 8ம் வகுப்பிற்குரிய 25 கோடி ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் வாழைச்சேனை காகித ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் 2010ம் ஆண்டுடன் பாடவிதானங்கள் மாறுகின்றபோதும் அவற்றை கணக்கில் எடுக்காது அச்சடிப்பு நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் தரகு கூலிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இச் செயலினால் மேற்படி 25 கோடி ரூபா பெறுமதியான புத்தகங்களை அழித்தொழிக்க நேரிட்டுள்ளது.
இப்புத்தகங்கள் வாழைக்சேனை காகித ஆலையில் றீசைக்கிள் பண்ணப்பட்டு மீண்டும் காகித உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதே நேரம் இப் புத்தகங்களை கொழும்பு ஒறுகொடவத்தை பிரதேசத்தில் உள்ள கல்வித் திணைக்கள களஞ்சியத்தில் இருந்து வாழைச்சேனைக்கு நகர்த்துவதற்கு லொறி ஒன்றிற்கு 69000 ரூபா வீதம் செலவிடப்பட்டுள்தாகவும். இதற்கான ஒப்பந்தம் சிசிர போக்குவரத்து சேவையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும். இத்தனை புத்தகங்கைளையும் நகர்த்துவதற்கு 50 லொறிகள் தேவைப்படும் என குறிப்பிட்ட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இவற்றில் அரைவாசி புத்தகங்கள் தற்போது வாழைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment