Wednesday, August 12, 2009

பொலிஸாருக்கு எதிராக மக்கள் 1380 முறைப்பாடுகள்.


பொலிஸாருக்கு எதிரான 1380 முறைப்பாடுகள் பொது மக்களிடம் இருந்த கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் விசாரணை அணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் பொலிஸார் முறைப்பாடுகளை உரியமுறையில் விசாரிக்க தவறியாக அமைந்துள்ளது.

கடந்த வருடம் (2008) இவ்வாறாக 448 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்றிருந்தாகவும் அவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேசிய பொலிஸ் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி முறைப்பாடுகளில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. 318 முறைப்பாடுகள் பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாகவும், 177 முறைப்பாடுகள் பொலிஸார் பக்கசார்பாக நடவடிக்கை எடுத்ததாகவும், 92 முறைப்பாடுகள் அடித்தல், 35 சித்திரவதை, 49 அப்பாவிகளை பொய்குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைத்ததாகவும் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் 6 முறைப்பாடுகள் பொலிஸாரின் தடுப்புக்காவலில் மரணம் சம்பவித்த சம்பவங்கள் ஆகும்.

No comments:

Post a Comment