10000 பேரளவில் இடைத்தங்கல் முகாமிலிருந்து ஒடியுள்ளனர். வவுனியா அரச அதிபர்.
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 10000 பேரளவான மக்கள் தப்பியோடியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்கள் தொடர்பாக பல எண்ணிக்கையான கதைகள் உலாவுகின்றபோதும், அரசாங்க அதிபர் காரியாலய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ் எண்ணிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் பலர் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாக முகாமில் இருந்து வெளியேறி திரும்பி வரவில்லை எனவும், ஏனைய ஒருதொகுதியினர் முகாமிற்கு உணவு பொருட்கள் மற்றும் இதரதேவைகளுக்காக வரும் வாகனங்களில் அதன் ஊழியர்களின் உதவியுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், ஒரு தொகுதியினர் காவல் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தும் தப்பிச்சென்றுள்ளனர். அத்துடன் மேலுமொரு தொகுதியினர் லட்சக்கணக்கான ரூபாய்களை சில அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கி அவ்வாறு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment