ஒவ்வொரு மாதமும் 10 வங்கிகள் திவால்
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையிலும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 வங்கிகள் திவாலாகி வருகின்றன.
நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான சுமார் எட்டு மாத காலத்தில் அமெரிக்காவில் சுமார் 81 வங்கிகள் திவாலாகி உள்ளன. பொருளாதார சீர்குலைவு உச்சகட்டத்தில் இருந்த சென்ற 2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 25 வங்கிகள் திவாலாகி இருந்தன. அதேசமயம், நடப்பு 2009-ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதங்களில் திவாலான வங்கிகளின் எண்ணிக்கை இதைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
குறிப்பாக, இம்மாதம் 21-ந் தேதி அன்று ரூ.57,600 கோடி மதிப்பிற்கு (1,200 கோடி டாலர்) டெபாசிட்டுகளை திரட்டி இருந்த கேரண்டீ பேங்க் என்ற அமெரிக்க வங்கி திவாலாகி உள்ளது. இது, இன்னும் அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
0 comments :
Post a Comment