தயா மாஸ்டருக்கு தர்ம அடி. மனைவி பிள்ளைகள் முகாமில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயாமாஸ்ரர் தனது மகனது பிறந்தநாள் நிமிர்த்தம் மனைவி பிள்ளைகள் தங்கியுள்ள செட்டிக்குளம் மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாம் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
புலிகளியக்கத்தின் முன்னாள் ஊடக இணைப்பாளராக செயற்பட்டுவந்த தயாமாஸ்ரர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி படையினரிடம் சரணடைந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள தயாமாஸ்ர் தனது மகனது பிறந்த தினம் அன்று அவரை பார்க்க விரும்புவதாக தெரிவித்ததையடுத்த மனிதாபிமான அடிப்படையில் மகன் தங்கியுள்ள பிரதேசத்திற்கு கொண்டு சென்ற போது, அங்கு சூழ்ந்த மக்கள் „ஆயிரக்கணக்கான சிறுவர்களை பலி கொடுத்து விட்டு உனது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமோ' என சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். நாம் நிலைமைகள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அவரை காப்பாற்றியதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்துக்கள் நேரலாம் என்ற அச்சத்தில் அவர்களையும் வேறு ஓர் முகாமிற்கு மாற்றியுள்ளோம் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment