Thursday, July 2, 2009

இலங்கையர் ஜனநாயக முன்னணியின் சேவையை ஜேர்மன் பத்திரிகை பாராட்டுகின்றது.

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிவாரணங்களுக்காக இலங்கையர் ஜனநாயக முன்னணியினர் ஜேர்மன் நாட்டில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜேர்மன் நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கைகளுக்கு தமிழ் அமைப்புக்களின் முன்னைநாள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டோரும் உதவிகளை புரிந்து வருவதாக தெரியவருகின்றது.

சேகரிக்கப்பட்ட பொருட்களை Bietiheim- Bissingen எனுமிடத்தில் வைத்து கொள்கலன்களில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பும் நிகழ்வுகளை நேடியாக சென்று பார்வையிட்ட ludwigsburger-kreiszeitung எனும் ஜேர்மன் முன்னணி பத்திரிகை "இலங்கை மக்களுக்கு கொள்கலன் நிரம்பிய உதவி" எனும் தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

பத்திரிகைச் செய்தியில் எழுதப்பட்டிருந்த உண்மைகளை அறிந்த ஜேர்மன் நாட்டுப்பிரஜைகளும், நிறுவனங்களும் இலங்கை ஜனநாயக முன்னணியினரைத் தொடர்பு கொண்டு தமது உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளதுடன் எவ்வாறான உதவிகளை தாம் வழங்க முடியும் என்கின்ற விடயங்களை ஆராய்ந்து வருவதாக இலங்கை ஜனநாயக முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









No comments:

Post a Comment