எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ரணிலாக இருக்கக் கூடாது - புதிய ஜாதிக ஹெல உறுமய
மகிந்த ராஜபக்ஷவை வெற்றிகொள்ளக் கூடிய வலு ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதை தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூட 4 பேர் கொண்ட பட்டியல் இருப்பதாகவும் இவர்களின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த எஸ் எழுத்து பட்டியல் தொட்ர்பில் அச்சம் கொண்டுள்ளதாகவும் மனமேந்திர கூறினார். எனினும் எஸ் எழுத்து கொண்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. ஜெனரல் சரத் பொன்சேக்கா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சரத் மனமேந்திர, சுமங்கள தேரர் ஆகியோரை புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment