இந்திய உளவுத்துறையுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் – பத்மநாதன்
இந்திய உளவுத்துறையுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்திய உளவுத்துறை இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அண்மைய போரில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருந்தது. முழமையான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்திய உளவுத்துறை எந்தளவு உதவியது என்பது தொடர்பிலான முழு விபரங்களும் எமக்கு தெரிந்திருந்தபோதிலும் நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்திய உளவுத்துறை பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்திய உளவுத்துறைக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதை இந்திய உளவுத்துறை ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க இந்திய உளவுத்துறை வேண்டும் என்றார் அவர்.
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் யுத்தமானது இந்தியாவின் பூரண ஒத்தாசையுடன் இடம்பெற்றிருக்கின்றது என புலிகளின் ஒரு தரப்பினராலும், தமிழர் தரப்பாலும் கூறப்பட்டு வருகின்ற தருணத்தில், கே.பி மக்களதும் புலிகளின் தலைமையின் கருத்துக்கும் எதிராக இந்தியாவுடன் இணைய முற்படுவதானது பிரபாகரனது மரணத்தின் பின்னர் புலிகளியக்த்தினுள் ஏற்பட்டுள்ள பிளவின் ஊடாக தனக்கு விரோதமான கருத்துக்களை கொண்டுள்ளோரை இந்திய உதவியுடன் முடித்துக்கட்டுவதற்கான கே.பி நடவடிக்கையாகும் என புலி ஆதரவாளர்களால் பேசப்படுகின்றது.
0 comments :
Post a Comment