Monday, July 6, 2009

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ந பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்-ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ந பின்னரே அரசியல் தீர்வுவை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். த கிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 13ம் திருத்தச்சட்டத்தை அமுலாக்குவது தெடர்பாக வினாவப்பட்டபோது அவர் கருத்து தெரிவிக்கையில்

13ம் திருத்தச்சட்டத்தை அமுலாக்குவது தொடர்பில் ஒரு தீர்வு திட்டம் உள்ளது. அதனை நாளை நினைத்தாலும் என்னால் அமுல்படுத்தமுடியும். ஆனால் அதனை பொதுமக்களின் அபிலாசனைகளுக்கு இணங்கவே அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த தீர்வு சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் எதிர்வரும் தேர்தல் முடிவடைந்ந பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தீர்வு திட்டம் தொடர்பாக வினாவப்பட்ட மேலுமொரு கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவகையான தீhவை எடுக்கவேண்டும் என்றும் , எதை வழங்க வேண்டும் எதை வழங்க கூடாது என்று தனக்கு தெரியும் என தெரிவித்த ஜனாதிபதி அந்த அதிகாரத்தை பொதுமக்கள் தனக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அத்துடன் இத் தீர்வு திட்டம் சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் தெரிவித்தார்.

மேலும் முகாம்கள் தொடர்பாக கருத்துதெரிவித்த ஜனாதிபதி வேறு எந்த நாட்டிலும் உள்ள முகாம்களைவிட இலங்கையில் உள்ள முகாம்களே தரத்தில் உயர்வானது என குறிப்பிட்டதுடன் சில முகாம்களில் ஓருசில குறைகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவருவதாகவும் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், முகாம்களில் மக்களின் சுதந்திரம் தொடர்பாக வினாவப்பட்டபோது. முகாம்களில் உள்ள மக்கள் புரண சுதந்தித்தை அனுபவிப்பதாகவும் ஆனால் நடமாட்ட சுதந்திரம் தொடர்பில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அதனை உடனே தீர்த்து வைக்கமுடியாத என குறிப்பிட்டார். அத்துடன் விடுதலை புலிகள் வன்னியில் ஒரு அங்குலத்திற்கு ஒரு நிலக்கன்ணிவெடியை புதைத்து வைத்து இருக்கின்றனர். அவ் நிலக்கன்ணிவெடிகளை அகற்றாமல் அவர்களை அப்பிரதேசங்களில் மீள்குடியமர்த்த முடியாது ஏனெனில் அவர்களுக்கு ஏதும் நடந்தால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவன் நானே என குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com