Friday, July 24, 2009

கருணாவின் ஆடக்களின் எல்லை கடந்த அத்துமீறல் : ஊடகவியலாளருக்கு மிரட்டல்.

அண்மையில் சேவாலங்கா எனும் அரசசார்பற்ற நிறுவனத்தினால் மக்களுக்காக வழங்கப்பட்ட இரு கூலர்வண்டிகள் தொடர்பான செய்தியொன்று இணையத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அச்செய்தியை வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கருணா தரப்பினர் ஊடகவியலாளர் ஒருத்தருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

ஊடக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் தங்கு தடையின்றி சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய சுவிற்சர்லாந்து நாட்டில் வசிக்கும் குறிப்பிட்ட ஊடகவியலாளரை அமைச்சர் முரலிதரனின் ஊடகச்செயலாளர் எனப்படும் யூலியன் என்பவர் 0094777869767 எனும் தொலைபேசி இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு விடுத்திருக்கும் அச்சுறுத்தலின் ஒரு தொகுதி பிரசுரமாகியுள்ளது.

கடந்த 30 வருடகாலம் இலங்கைத் தீவை பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தபோது இருந்திராக ஊடக அச்சுறுத்தல் இன்று கருணாவின் ஆட்களால் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் அந்த ஜனநாயக விரோதச் செயலானது இன்று நாடுகடந்தும் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

சமுதாயத்தில் தவறொன்று நடக்கின்றபோது சுட்டிக்காட்டத் தவறுகின்ற ஊடகவியலாளன், ஊடக தர்மத்திற்கு சாவு மணி அடித்தவனாக கருதப்படுவான். ஆனால் ஊடக சுதந்திரம் எனும்பெயரால் ஊடகவியலாளன் ஒருவன் தவறான செய்திகளை பரப்புவானாயின்,, குறிப்பிட்ட செய்தி தொடர்பான தமது தரப்பு நியாகங்களை கருத்துக்களால் எதிர்கொள்வதை விடுத்து ஊடகவியலாளர்களின் குரல்வளையை அடாவடித்தனங்களால் நசுக்க முயற்சிப்பது ஜனநாயக நாடொன்றின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலானது முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவும் நாட்டில் தான்தோன்றித்தனமாக குட்டிப் பஞ்சாயம் நாடத்துவோரது அடாவடித்தனங்கள் அரசினதும் மற்றும் அனைவரினதும் காதுகளில் ஒலிக்கவேண்டும் என்பதற்காகவும் இவ்விடயம் அம்பலத்திற்கு வருகின்றது.

ஒலிப்பதிவில் உள்ள தகாத வார்த்தை பிரயோகங்களையும் பொருட்படுத்தாமல் இவற்றை பிரசுரித்ததற்கான காரணம் வன்செயல்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதாகும்.

ஒலிப்பதிவைக் கேட்க

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com