Wednesday, July 29, 2009

பழையனவை துக்கியெறிந்து புதுமைகளை வாரிஅணைத்து இனியாவது ஒரு விதிசெய்வோம்

இருளில் மூழ்கியிருந்த
நம் பூமிக்கு உன்னால்
இயன்ற ஓர் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

தீமைகளை விதைத்தவர்களை
விலக்கிவிட்டு விலங்கிட்டு
திறமைகளினால் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

சுமைகளை தாங்கி தாங்கி
சோர்ந்துபோன மக்களுக்கு
சுயநலவாதமில்லாமல் நாங்கள்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

இன்பங்களை சுமந்த மக்கள்
துன்பங்களில் குளித்தது போதும்
தலைதுடைக்க துணிகொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஏழைமக்களை ஏமாற்றி பிழைத்து
தருமர்களாய் வேடம் போட்ட
பாவிகளை விட்டுத்தள்ளி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

உண்மைகளை பொய்மைகளாக்க
உலகத்திற்கு எடுத்துக்கூறி
உருவங்களை மறைப்பதை விட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

வீண்சோகங்களை மண்ணில் புதைத்து
பயன்தரும் சிறப்புகளை சிந்தித்து
தரணியில் விவேகங்களை விதைத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பாதையின் தடைகளை வீரமுடன்
கால்களுக்கு இடையூறின்றி விலக்கிவிட்டு
விந்தைகளை குறைத்து நோக்காமல்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பழையனவை தூக்கியெறிந்து நாம்
புதுமைகளை வாரிஅணைத்து
புவியின் ஈர்ப்புசக்கி அறிந்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

சுமைகள சுமப்பவர்களுக்கு
சுடுசோறு கொடுக்கவிட்டாலும்
சுமைகளை தாங்க கரமாவது கொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

புத்திஐpவிகளின் புகழ் பாடி
புரியாத புதிர்களுக்கு விடை தேடி
புதிய பாதையில் நடை போட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஆயுதம் வேண்டாம் அழிவு எமக்கு
அகிம்சையே போதும் என்றும் நமக்கு
அள்ளியெடுத்து முத்தமிட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

கிளியின் கிராமத்து நாயகன்
வவிதரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com