முகாம்களிலிருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்து 80ஆயிரம் பொதுமக்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீள்குடியேற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
முகாம்களில் பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டினார். கடும் மோதல்கள் காரணமாக, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்த பொதுமக்களே முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலெனக் கூறிய பிரட் அடம்ஸ், ஏனைய இலங்கையர்களைப் போன்று முகாம்களிலிருக்கும் மக்கள் வாழ உரிமையுடையவர்களெனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment