Tuesday, July 28, 2009

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர் கொழும்பில் கைது

தற்கொலை அங்கி, பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருந்த முக்கியஸ்தர் ஒருவரை கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்திலிருந்து 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தரான பாக்கியராசா பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகை யில்:-

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்குக் கிடை த்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து பாக்கியராசா பிரதீபன் கைது செய்ய ப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த தற்கொலை அங்கியொன்றும் மற்றும் வெடி மருந்துகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி அதிசக்தி வாய்ந்த குண்டுகள் 04, 3 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த காந்தவெடி-01, பெருந்தொகையான வெடிக்க வைக்கும் கருவிகள், கைக்குண்டுகள்-19. சைலன்சர் ரக பிஸ்டல், பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள், பற் றரிகள்-5 மற்றும் உபகரணங்களையே அந்த வீட்டிலிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பல்வேறு தகவல் களை பெற்றுக் கொண்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவி னர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment