Thursday, July 16, 2009

ஜனாதிபதி எழுத்துமூலம் ஒப்புக் கொண்டவிடயத்தை நிறைவேற்றாவிடின் சட்ட உதவியை நாடுவாராம் ரில்வின் சில்வா.

டெய்லி மிரர் பத்திரிகையின் Hot Seat எனும் நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்ட ஜேவிபி யின் ரில்வின் சில்வா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி மஹிந்த எழுத்துமூலம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அந்த விடயத்தை அவர் நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கினோம். அங்கு பதின்மூன்று நிபந்தனைகள் இருந்தது. அதில் ஒரு நிபந்தனை அவரது ஆட்சி முடிவதற்குள் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது செய்தல். இவ்விடயத்திற்கு அவர் இணங்கியதாலேயே நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அவர் இது தொடர்பாக எமக்கு வாக்குறுதி தந்தார். அதன்போது எம்முடன் இருந்த சாட்சிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே அவர் எமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறுதான் எம்முடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அவ்வாறு ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாமல் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முற்படின் நாம் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எமது சட்ட ஆலோசர்களை நாட நேரிடும் எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com