Monday, July 6, 2009

நாட்டின் அபிவிருத்தி பணிகளில் படையினரை ஈடுபடுத்த வேண்டும் -பிரதமர்

தியத்தலாவை இராணுவ பயிற்சிகல்லூரியில் 281 கடெற் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார் அங்கு அவர் உரையாற்றுகையில்

30வருடகாலமாக நிலவிவந்த யுத்தம் படைவீரர்களின் பல்வேறுபட்ட அர்பணிப்பின் காரணமாக முற்றுப்பெற்றது. இப்பொழுது நாட்டில் உள்ள சகல மக்களுக்கும் சமமான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வபிவிருத்தி பணிகளில் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment