டக்ளஸ் கருணா இடையே போர் ஆரம்பம்
13ம் திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவாறு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு 13ம் திருத்தச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்படவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13 திருத்தச்சட்டத்தில் திட்டமிடல், கல்வி, உயர்கல்வி, உல்லாசப்பிரயாணத்துறை, நீர்பாசனம், சுகாதாரம், விவசாயம், தொழில், சமூகசேவை, புனருத்தாபனம் உட்பட 36 விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் முதலில் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அடுத்த கட்டமாக குறிப்பிடப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஐ.ம.சு.மு நியமன எம்பி. முரளிதரன் கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் தேவையில்லை என கூறியிருக்கின்ற நிலையில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஒருவரால் இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment