Thursday, July 2, 2009

ஐரோப்பிய புலிகளின் பிளவு உறுதிப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் புலிகளியக்கம் பூண்டோடு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாடுகளில் உள்ள புலிகள் சொத்துக்களை மடக்கிக்கொள்வதற்காக குழுக்கள் குழுக்களாக பிரிந்து நிற்கின்றனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலைமைகள் இன்று தீவிரமடைந்து வருகின்றது. பிரித்தானியாவில் இன்று கூடிய புலிகளின் ஒரு தரப்பினர் தாம் அமைக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழம் பற்றி ஆராய வருமாறு பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தாகவும், அவ்விடயத்தை அறிந்த றெஜி தரப்பினர், தலைவரைக் காட்டிக்கொடுத்த துரோக கும்பலை சேர்ந்தவர்களே இங்கு கூடுவவதாகவும் அவ்வொன்று கூடலுக்கு செல்வோரும் துரோகிகள் என அறிவித்துள்ளதாகவும் தெரியவருன்றது.

அதே நேரம் நேற்று நோர்வேயில் கேபி குழுவினரின் ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு நோர்வே நாட்டுக்கான விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கு சென்ற மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், பழைய நிர்வாகத்தினரான முகிலன் குழுவினருடன் மக்கள் எவ்வித தொடர்புகளையும் பேண வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் இச்செய்தி எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி சேவையூடாக அனைத்து புலிச்செயற்பாட்டாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. மறுபுறத்தில் முகிலன் குழுவினர் கேபி குழுவினரின் செய்திகளை நிராகரிக்குமாறு மக்களை வேண்டி வருவதாக அறியப்படுகின்றது.

இதே போன்று புலிகளின் உள்வீட்டு போர் ஜேர்மன், பிரான்ஸ், கனடா நாடுகளிலும் தீவிரமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment