Wednesday, July 1, 2009

வெளியுறவுச் செயலராகிறார் நிருபமா ராவ்


இலங்கையில் தூதராக கடமையாற்றியிருந்த நிருபமா ராவ் இந்திய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட உள்ளார்.

இது குறித்த தகவலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தற்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ந்தேதி முடிவடைகிறது.

இதனால் புதிய வெளியுறவுச் செயலராக, சீனாவில் இந்தியத் தூதராக பணியாற்றி வரும் நிருபமா ராவ் நியமிக்கப்பட உள்ளார்.

நிருபமா ராவ் 1973ல் இந்திய வெளியுறவு அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இவர், சோகிலா ஐயரைத் தொடர்ந்து வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கவிருக்கும் இரண்டாவது பெண்மணி ஆவார்.

இவர் வெளியுறவுத் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியிருக்கிறார்.

வாஷிங்டன், மாஸ்கோவிற்குச் சென்ற தூதுக்குழு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசியாவிற்கான இணைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர் என்று அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment