Sunday, July 12, 2009

40 க்கு மேற்பட்ட முன்னாள் புலிகள் க.பொ. தராதர உயர்தரப் பரீட்சை எழுதுவர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சுமார் 1000 பரிட்சாத்திகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெற இருக்கும் கல்விப் பொதுத்தராதரப் பரிட்சையில் பங்கு கொள்வர் என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகளியக்கத்தில் இருந்து சரணடைந்துள்ள சுமார் 40 இளைஞர், யுவதிகள் இப்பரீட்சைகளில் பங்கு கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ள அவர், புலிகளியக்கத்தில் இருந்து சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது எதிர்காலத்தின் நிமிர்த்தம் பல தொழில் பயிற்சிகளை தெரிவு செய்து பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர் தமது கல்வியை தொடர விரும்பியுள்ளனர். அவ்வாறனவர்கட்கு அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

பரிட்சாத்திகளுக்கான விசேட அடையாள அட்டையை வழங்குவதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் இருந்து விசேட குழு ஒன்று நாளை வவுனியா விரைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com