Wednesday, July 1, 2009

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. சுசில் பிரேம ஜெயந்த.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நோக்கம் அரசிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த அவர்கள் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு அரசு வழங்குமாக இருந்தால் தாம் அரசில் இருந்து வெளியேறப்போவதாக ஜாதிக ஹெல உறுமய விடுத்திருக்கும் அச்சுறத்தல் தொடர்பாக பிபிசி க்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளிலும், அமைச்சரவையிலும் அமைச்சுப்பதவிகளையும், பிற பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ள ஹெல உறுமயவினர் அரசிலிருந்து வெளியேற மாட்டார்கள் என தனக்கு அசையாத நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் அதற்கு மேலாக 13+ எனும் ஓர் விடயத்தையும் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் என்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பல அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமே நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வைக்காண முடியும் எனவும் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment