Saturday, June 20, 2009

CARE International வாகனத்தில் குண்டு கொண்டுவரப்பட்டது. நீதிமன்றில் சந்தேக நபர்கள்.

பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ச மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான வெடிகுண்டு CARE International எனப்படும் அரச சார்பற்ற வெளிநாட்டு தொண்டு நிறுவனம் ஒன்றின் வாகனத்தில் கொண்டுவரப்பட்டதாக தடுப்புக்காவலில் உள்ள அரச சார்பற்ற அந் நிறுவனத்தின் இரு ஊழயர்கள் தெரிவித்துள்ளனர்.

CARE International வாகனத்தில் கொண்டுவரப்பட்ட இக்குண்டு சிவலிங்கம் ஆருரன் என்பவரால் ருத்ரா மாவத்தையில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்த வீட்டில் வைத்திருக்கப்பட்டு, பொன்னுசாமி கதிரேசு என்பவரால் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில் தாக்குதலுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான தர்மலிங்கம் தர்மதரன், ராசையா கண்ணன் ஆகியோர் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நிசங்க கப்புஅராட்சி முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006.12.01 அன்று இடம்பெற்ற இக்குண்டுத் தாக்குதலில் லெப்.கேணல் பிரியந்த விஜயரத்ன, லெப்.கேணல் எம்.கே பியசிறி ஆகியோர் கொல்லப்பட்டதுடன் 10 இராணுவத்தினரும் 5 சிவிலியன்களும் காயமடைந்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com