Wednesday, June 3, 2009

கல்முனை கல்வி வலய ஆசிரியர்களின் இடமாற்றங்கள் பிற்போக்குத்தனமானவை.

திட்டமிட்ட முறையில் கல்முனை கல்வி வலய தமிழ் பாடசாலைகளிலுள்ள கற்பித்தலில் ஊக்கம் உள்ள தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகட்கு இடமாற்றப்பட்டதுடன் தமிழ் பாடசாலைக்கு கற்பித்தலில் ஆர்வம் குறைந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்பெற்றனர். இவ் இடமாற்றங்களுடாக தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கட்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகளை ஊகித்துக்கொண்ட மாணவர்கள் தமது பூரண எதிர்ப்பை வெளிக்காட்டுமுகமாக கடந்த 01-06-2009 திங்கள் கிழமை கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு ஆட்சேபத்தை தெரிவித்தனர்.

முஸ்லிம் ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளில் நியமிக்கப்படுகின்றபோது அங்கு பல நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றது. சாதாரணமாக இஸ்லாமிய ஆசிரியர்கள் பிரதி வெள்ளிதோறும் தொழுகை நிமிர்த்தம் 11 மணியுடன் பாடசாலையில் ஓய்வுபெறும்போது பாடசாலையில் உள்ள பல வகுப்புக்கள் ஆசரியர்கள் இல்லாமல் இருக்கையில் பாடசாலையில் உள்ள சகல வகுப்புக்களும் இயங்க முடியாததோர் நிலைதோன்றுகின்றது. அவ்வாறே நோன்பு தினங்களிலும் முஸ்லிம் ஆசிரியர்கள் அதிக விடுமுறைகளைப் பெறுகின்றபோது பாடசாலை நிர்வாகம் ஸ்தம்பிதம் அடைவதுடன் பாடத்திட்டத்தினை உரியநேரத்தில் முடிக்கமுடியாத ஓர் தூப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்து நாகரீகம், இந்து சமயம், நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகட்கும் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் தமிழ்பாடசாலைகட்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தாம் விசேடமாக பயிற்றப்பட்ட பாடங்களை புகட்டுவதற்கான சந்தர்ப்பங்களை அவ் ஆசியரியர்கள் இழக்கநேரிடுகின்றது.

அத்துடன் 3ம் தவணை பரீட்சை முடியமால் ஆசிரியர்களை இடமாற்றம் செய்கின்றபோது மாணவர்கள் புதியதோர் ஆசிரியரை பழகி தமது பாடங்களைத் தொடர்வதில் தாமதங்கள் ஏற்பட்டு பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இவற்றை கவனத்தில் கொண்டு உயர் மட்ட கல்வி அதிகாரிகள் சரியான முறையில் திட்டங்களை வகுத்து தமிழ் பாடசாலைக்கு தமிழ் ஆசிரியர்களையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமிப்பதன் ஊடாக எதிர் காலத்தில் சிறந்த கல்விப் பிண்ணனியை உருவாக்கவும், கல்வியில் சிறந்த நேர முகாமைத்துவத்தினையும் பேண முடியும்.

No comments:

Post a Comment