Saturday, June 6, 2009

புலிகளுடனான நோர்வே அரசின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுவருகின்றது.


புலிகளின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டும் சேது நோர்வே தேசிய தொலைக்காட்சி மூலம் பல தவல்களை வழங்கினார்.

புலிகளியக்கம் ஐரோப்பாவில் உள்ள சகல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் நோர்வே புலிகளுக்கு அனுதாபமாகவே செயற்பட்டு வந்தது. ஆனால் அவர்களின் நிலையில் தற்போது பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நோர்வே அரசின் தேசியத் தொலைக்காட்சியில் புலிகளின் அராஜகங்கள் பலவும் வெளிகொணரப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் விசேட நிகழ்வு ஒன்றின் முலம் இலங்கைத் தமிழ் சமூகத்தை சேர்த்த பலரை தெரிவு செய்து அவர்களது கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அந்நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் புலிகள் தம்மிடம் பலவந்தமாக பணம் பறிப்பதாவும் பணம் கொடுக்காத விடத்து பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம்கொடுக்கநேரிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நிகழ்வில் புளொட் அமைப்பைச் சேர்ந்த ராஜா என்பவர் பங்குகொண்டிருந்தார். அவரது கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த புலிகள், அவர் மாற்று இயக்கம் ஒன்றின் அங்கத்தவர் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட, அனைவராலும் புலிகளின் பிரச்சாரப் பொறுப்பாளராக அறியப்பட்ட சேது என்பவர் புலிகள் தொடபான பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். அவர் பங்கு கொண்ட இன்றைய நிகழ்வில் கிட்டத்தட்ட 25 இலங்கைத் தமிழர்கள் பங்கு கொண்டதாகவும் அவர்கள் அனைவரும் புலிகளின் அராஜகங்கள் தொடர்பாக தமது அதிருப்தியை தெரிவித்ததாவும் தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு நோர்வேயில் புலிகளை தடைசெய்வதற்கான கருத்துகணிப்பாகவே இடம்பெறுவதாக கருதப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com