ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கடிதம்
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன். அவர் கொடுத்த வாக்குறுதிகளை, குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் சிங்களர்களைப் போல சம அந்தஸ்து வழங்குவதாக ஒத்துக் கொண்டதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதில் குறிப்பிட்டு இருக்கிறேன். கடைசி கட்ட போரின்போது ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல. பெரும் கவலை அளிக்கக் கூடிய இந்த குற்றச்சாட்டு பற்றி சர்வதேச சட்ட விதிகளின்படி, வெளிப்படையான மற்றும் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment