படையினரின் வெற்றி விழா சுவிற்சர்லாந்திலும் கொண்டாடப்பட்டது.
இலங்கையில் புலிகளியக்கத்தை தோற்கடிப்பதற்கு தமது உயிர்களைத் தியாகம் செய்த படையினரை நினைவு கூருமுகமாக விசேட வெற்றி விழா சுவிற்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. கடந்த 13ம் திகதி Fribourg எனும் இடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் ஈபிடிபி , ஈபிஆர்எல்எப் , புளொட் அமைப்புக்களைச் சேர்ந்தோருடன் பலரும் கலந்துகொண்டனர்.
சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மனி தூதுவர் ரி.பி. மடுவஹெதர அவர்களால் எற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக போரில் உயிர்நீத்த அனைத்து படையினருக்கும் இரு நிமிடநேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக மெழுகு தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அனைவரும் இலங்கை தேசிய கீதம் பாடினர்.
0 comments :
Post a Comment