புலிகளின் பிரச்சாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் என அனைவராலும் அறியப்பட்ட சேது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
புலிகளியக்கம் பிரச்சாரத்தின் ஊடாக அதன் மாயையை மக்கள் முன் நிலைநிறுத்தியது என்பது, புலித்தலைமை வேரோடு புடுங்கப்பட்ட விதம் எடுத்துக்கூறுகின்றது. இவ்வாறான புலிகளின் மாயையை நிலைநிறுத்த முக்கிய பங்காற்றியவர் என அனைவராலும் அறியப்பட்ட சேது எனப்படும் நடராசா சேதுரூபன் நோர்வே புலிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். அவ் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. புலிகளின் தலமையினுள் ஏற்பட்டுள்ள பிளவுகளே இவ்வாறான கொத்துவெட்டுக்களுக்கு காரணம் என நம்பப்படுகின்றது.
கடந்த 15 திகதி நோர்வே பாராளுமன்றத்திற்கு சென்று செய்தி சேகரித்த குற்றத்திற்காக புலிகளால் நான் கடுமையாக தாக்கபட்டேன்.
26 திகதி 04ம் மாதம் - புலிகளின் ரி.சி.சி அலுவலகத்திற்குள் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் முரசம் வானொலியில் என்னை துரோகி என்று புலிகள் அறிவித்தனர்.
நோர்வே பிரமதரின் அலுவலகத்திற்கு முன்பாகவும் அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாகவும் புலிகளால் நான் சுட்டுக் கொல்லபடுவேன் என்று எச்சரிக்கபட்டேன்.
இது தொடர்பாக பொலிஸார் 02 புலி முக்கியஸ்தர்களை கைது செய்துள்ளனர்.
இதே போன்று செய்தியாளன் நடராஜா சரவணனை போத்தலால் குத்தி கொலைசெய்ய முற்பட்ட நோர்வே புலிகள் 02 பேருக்கு 3 வருட ஒத்திவைத்த சிறையும் 06 மாத கடுளிய சிறையும் நோர்வே நீதின்றத்தால் வழங்கபட்டுள்ளது.
0 comments :
Post a Comment