கப்டன் அலி கப்பலில் ஆயுதங்கள் இல்லை, மருந்தும் உணவுப் பொருட்களுமே.
இலங்கை கடற்பரபினுள் அத்துமீறி நுழைந்ததாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்படன் அலி கப்பலில் எவ்வித ஆயுதங்களும் இல்லை எனவும் அதில் மருந்துப்பொருட்களும் உணவுகளும், அங்கவீனர்களுக்கான ஊண்டு தடிகள் மாத்திரமே காணப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
800 மெற்றிக்தொன் பொருட்களுடன் சிரியா நாட்டுக் கொடியைத் தாங்கிவந்த இக்கப்பலில் கப்டன் உட்பட 15 சிப்பந்திகள் காணப்படுவதாகவும் இவர்களின் இருவர் பிரித்தானிய கடவுச்சீட்டை கொண்டுள்ள இலங்கையர்கள், இருவர் எகிப்தியர்கள், 11 பேர் சிரியர்கள் எனவும் இவர்கள் எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கே பாணந்துறை கடற்பிரதேசத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இக்கப்பல் மீது கடற்படையினரின் விசாரணைகள் தொடர்கின்றது. இக்கப்பல் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக, சோதனை முடிவில் கடற்படையினரால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இறுதி அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment