கனடிய புலனாய்வுத் துறை புலிகள் மீது தனது பார்வையை திருப்புகின்றது.
தோற்கடிக்கப்பட்ட புலிகள் கனடாவினுள் நுழைவதைத் தடுப்பதற்கு கனடிய புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துவருகின்றது. நிலைமைகளை சீராக கண்காணிக்கும் பொருட்டு வெளிநாட்டுவிவகாரங்களுக்கான கனடிய புலனாய்வுத் துறை தனது காரியாலயத்தை டெல்லியில் இருந்து கொழும்புக்கு நகர்த்தியுள்ளது. கொழும்பு அலுவலகத்தில் செயற்படும் புலனாய்வு பிரிவினருக்கு உதவியாக கனடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சகல வீசா விண்ணப்பங்களையும் பரிசீலிப்பர் எனவும் தேவை ஏற்படின் அவர்கள் விண்ணப்பதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்துவர் எனவும் பிரஜாவுரிமை மற்றும் குடிவரவு குடியகல்வு பிரதி அமைச்சர் ரிசார்ட் பாடன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment