இலங்கைச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது. 1700 பேரையே தடுத்து வைக்க கூடிய இச் சிறைச்சாலையில் 6046 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4000 பேர் சிறைக்கைதிகள் எனவும் 2046 பேர் விளக்கமறியல் கைதிகள் எனவும் தெரியவருகின்றது.
சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய தடுத்து வைக்கப்படும் கைதி ஒருவருக்கு 540 சதுரஅடி பரப்பளவு ஒதுக்கப்படவேண்டும். ஆனால் இப் பரப்பளவில் இலங்கையில் 8 முதல் 10 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா விற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment