Friday, June 19, 2009

வடகொரியாவை தாக்க தயார் நிலையில் அமெரிக்க ஏவுகணை

வடகொரியா தனது பக்கத்து நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் அமெரிக்காவையும் மிரட்டுகிறது.

இந்த நிலையில் வட கொரியா ஏராளமான ஆயுதங்களை குவித்து வருகிறது. ஏற்கனவே அணுகுண்டு தயாரித்து சோதனை நடத்தியது. 2-வது தடவையாக 3 வாரங்களுக்கு முன்பு அணுகுண்டு சோதனை நடத்தியது. இதே போல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையும் நடத்தியது.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து ஆயுத சோதனை நடத்துகிறது. மீண்டும் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைக்கு தயா ராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சோதனைகள் முடிந்ததும் வடகொரியா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அப்படி தாக்குதல் நடத்தினால் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் குதிக்கும்.

அமெரிக்கா எங்கள் மீது தாக்கினால் அதற்கு 1000 மடங்கு பதிலடி கொடுப் போம் என்று வடகொரியா எச்சரித்து உள்ளது.

வட கொரியாவிடம் உள்ள ஏவுகணையால் அமெ ரிக்காவின் அலாஸ்கா பகுதியை தாக்க முடியும். அப்படி தாக்கினால் நடுவானிலேயே அந்த ஏவுணையை தாக்கி அழிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக அமெரிக்கா எதிர்ப்பு ஏவுகணைகளை அலாஸ்கா பகுதி களில் பொருத்திவருகிறது. இந்த ஏவுகணைகள் ரேடார் மூலம் எதிரில் வரும் ஏவுக ணைகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழித்து விடும்.

இதற்கிடையே வட கொரியா, தென் கொரியா மீது விஷவாயு குண்டுகளை வீச தயாராக இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான திஸ்டாங் கூறியுள்ளது.

No comments:

Post a Comment