தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிசோர் தலைமையிலான குழுவினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணையலாம்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டு முன்று பிரிவுகளாக பிரிந்துள்ளதாக தெரியவருகின்றது. புலிகளினால் தமிழ் கூட்டமைப்பு நிர்வகிக்கப்பட்டபோது கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வந்த புலிகள் இயக்கத்தின் தீவிர விசுவாசிகளான குதிரை கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி போன்றோர் தற்போது சம்பந்தன் குழுவினரால் முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிவநாதன் கிசோர் தலைமையிலான குழவொன்று அரசுடன் இணைவதற்கு முயற்சித்து வருகின்றனர். அதேநேரம் வினோதலிங்கம் சிறிரெலோவின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிந்துள்ளது.
0 comments :
Post a Comment