எம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தாருங்கள். -ஜேவிபி அனுர திஸாநாயக்க-
அரச ஊடகங்களில் ஜேவிபி மற்றும் அதன் தலைவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஊடக தகவல்த்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அரச ஊடகங்களில் பல தடவைகளில் தமது கட்சி மற்றும் கட்சித் தலைவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த யூன் 11 ம் திகதி சுயாதீன தொலைக்காட்சில் இட்பெற்ற துலாவ எனும் விசேட அரசியல் நிகழ்ச்சியில் தன் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாவும் இது தொடர்பாக மக்களுக்கு பதிலளிக்கும் எமது உரிமையை ஏற்று அரச ஊடகங்களில் தமக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment