Thursday, June 18, 2009

இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்ல அனைவருக்கும் உரிமையுண்டு- நிதிமன்றம்.

தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு நலன்புரி முகாம்களுக்கு செல்லவேண்டியதில்லை-அரசாங்கம்.

எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளதாகவும் அவர்களுக்கு உதவ முகாம்களுக்குச் சென்று பார்வையிட எதிர்க்கட்சிகளுக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன லஷ்மன் செனவிரத்ன மங்கள் சமரவீர ஹசன் அலி மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு என அறிவித்த நீதியரசர்கள் இம்மனு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ஆதேநேரம் இது தொடர்பாக அரசாங்கம் கருத்து தெரிவிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொண்டு வருகின்றது ஏனைய முன்னணிகளை பொறுத்தமட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னணியில் இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு அகதி முகாம்களுக்கு செல்லவேண்டிய தேவையில்லை. அகதி முகாம்களை பொறுத்தமட்டில் அங்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். தேர்தல் நடைபெறும் பிரதேசத்திற்கும் அகதிமுகாமிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை வேறு ஏதோ நோக்கத்திற்காகவே அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர் என ஊடகதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment