புலிகளின் தலைவர் ஒருவர் அமமெரிக்க நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
புலிகளுக்காக அமெரிக்காவில் ஆயுத உபகரணங்களை கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நால்வரில் பிரதான நபர் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான சட்டவிரோத திட்டங்களை வகுத்ததான குற்றத்தை அமெரிக்க நீதி மன்றில் ஒத்துக்கொண்டுள்ளார்.
இவ்வழக்கில் கைதாகியிருந்த மூவரும் தமது குற்றங்களை ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன் பிரகாரம் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் கருணாகரன் கந்தசாமி, பார்த்தீபன் தேவராஜா ஆகியோருக்கு 20 வருட சிறைத்தண்டனையும் முருகேசு விநாயகமூர்த்தி, விஜெய்சாந்தர் பத்மபநாதன் ஆகியோருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
0 comments :
Post a Comment