இலங்கை அபிவிருத்தி தொடர்பாக மெல்போண் நகரில் மாநாடு.
இலங்கையின் எதிர்கால அவிவிருத்தி திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலமையில் அவுஸ்திரேலியா, மெல்போண் நகரில் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அடுத்தவாரம் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா வாழ் இலங்கை மக்கள் யாவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இம்மாநாட்டில் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக விசேடமாக பேசப்படும் எனவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment