Thursday, June 18, 2009

துடுப்பு முளைக்கும் கட்டுமரம். –வம்சிகன்-

ஆண்டுகள் பலவாய்க்
குறுகிக் கிடந்து
கடல்
அமைதியாய் இருந்த
பொழுதுகளிலும்
கரையில்
மோதிக்கொண்டேயிருந்த
சிக்கல் விழுந்த
வலைகள்
அவிழ்ந்து
அகண்டு
பாடு விரிக்கின்றன.

பறிக்கூடு கனக்கவும்
மனக்கூடு மிதக்கவும்
உரிமையுள்ள
சுதந்திரக் கடல் அனுமதிக்கட்டும்.

இலங்கைத்தீவின்
எந்தக் கரையிலும்
இந்த வலைகள்
நனைய வேண்டும்.
வீசுகின்ற கைகள்
இணைய வேண்டும்.

கரையோர மணலிலும்
கண்ணீரிலும்
துடுப்பு முளைத்த கட்டுமரம்
அடுத்த சந்ததியில்
பாய் மரமாய் வளர்ந்து
இலங்கையின்
எல்லாக் கரைகளையும்
இணைக்கட்டும்.

குடிசையின்
கை விளக்குகள்தான்
நாட்டின்
வெளிச்சக் கூடுகள்.
VII.

No comments:

Post a Comment