ரிஎன்ஏ தமிழ் மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்லப்போவதில்லை - சிசோர்.
வவுனியா பிரதம வேட்பாளராக கிசோரது மனைவி
வடக்கின் செயலணி அமர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. பா.உ பசில் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இவ்வமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் கலந்து கொண்டு பேசுகையில் வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்ல திட்டங்களுக்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஏனைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு தான் அழைப்பு விடுக்கவோ, ஆலோசனைகள் வழங்கவோ போவதில்லை என்றும் அவர்களும் என்னைப்போன்றே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்த தருணத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கும் தெரியும் என்றும் சிவநாதன் கிஷோர் எம்.பி. ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதே நேரம் கிசோரது மனைவி திருமதி சுதந்தி கிசோர் வவுனியா உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரத வேட்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment